தைவானில் நிலநடுக்கம்-ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்
Subscribe to Oneindia Tamil
தைபோ:தைவான் நாட்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு 7 பேர் பலியாகி, ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்ட நிலையில் தைவானில் இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 என்ற அளவுக்குப் பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு தெரியவில்லை.
இதற்கிடையே ஜப்பானில் நேற்று விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. கடும் கடலடி நிலநடுக்கத்தையடுத்து எச்சரிக்கை விடுக்க்பபட்டாலும் அங்கு சுனாமி ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications