டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயணிகள் தர்ம அடி
சென்னை:டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த பயணியை தேவையில்லாமல் அடித்த, டிக்கெட் பரிசோதகர்களை மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (26). சென்னையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்திருந்த அவர் தாம்பரம் வந்தார். அங்கிருந்து ஒரு டவுன் பஸ்சில் ஏறினார்.
டிக்கெட் வாங்காமல் பேருந்தில் அவர் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் ராஜமாணிக்கம், கங்காதரன் ஆகியோரிடம் அவர் சிக்கினார்.
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடியுள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர், இன்ஸ்பெக்டர் மற்றும் அவர்களுடன் வந்த விமலேஷ் என்ற வாலிபர் ஆகியோர் அவரை விரட்டிப் பிடித்தனர்.
பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ராஜாவை அடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த பொதுமக்களும், பயணிகளும் கடுப்பாகி விட்டனர். இதையடுத்து அனைவரும் சேர்ந்து ராஜாவை போட்டு அடித்த மூன்று பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீஸார் ராஜாவை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிக்கெட் எடுக்காமல் பயணித்தற்காக அவருக்கு ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது.
பரிசோதகர்களுடன் வந்த விமலேஷ் என்பவர் அவர்களுடனேயே செல்வாராம். அவருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம். பிறகு எதற்காக இவரையும் பரிசோதகர்கள் இருவரும் உடன் அழைத்துச் சென்றனர் என்பது குறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications