கோட்டயம் அருகே தடம் புரண்ட சென்னை ரயில்
கோட்டயம்:திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் ரயிலின் என்ஜின், கோட்டயம் அருகே தடம் புரண்டது. இருப்பினும் பயணிகளுக்கு இதில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. வேறு ரயில் மூலம் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் ஒன்று நேற்று இரவு கிளம்பியது. இந்த ரயில், கோட்டயம்-எர்ணாகுளம் ரயில் பிரிவில் கோட்டயம் அருகே உள்ள குருப்பூந்துரை என்ற இடத்தில் வந்தபோது என்ஜின் தடம் புரண்டது.
கன மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் என்ஜின் தடம் புரண்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் மட்டும் தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ரயில் டிரைவர் மற்றும் இரு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ரயில் என்ஜின் தடம் புரண்டதால் அந்தப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் ஆலப்புழை வழியாக திருப்பி விடப்பட்டன. சென்னை ரயிலின் பயணிகள் கோட்டயம் வரை அழைத்துச் செல்லப்பட்டு வேறு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்னர்.
ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அது முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications