காங். ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாராலும்ஆட்சி அமைக்க முடியாது-வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:இனிமேல் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

வட சென்னையில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் வாசன் கூறியதாவது,

நாட்டின் வழிகாட்டியாக இருந்தவர் காமராஜர். அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் சுமார் 12 கோடி மாணவ-மாணவியர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எந்த வேறுபாடும் காட்டாமல் நிதி உதவி அளித்து வருகிறது. இதில் தமிழகம் கொண்டு வந்த திட்டங்களை ஆராய்ந்து அதிகளவில் நிதியுதவி அளித்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து இன்றுவரை 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுநாள் வரை கட்சியை நாங்கள் கட்டுக்கோப்பாக (!!!!) வைத்திருப்பதற்கு காரணம் எங்களின் தன்னலமற்ற தொண்டர்கள்தான்.

நமது கட்சி இன்று தமிழகத்தில் மற்ற கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக இருக்கிறது. காங்கிரசின் ஒருமித்த ஆதரவு இல்லாமல் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க இயலாது.

வரும் காலங்களில் இந்த நிலை மாறி நமது ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நமது ஆட்சியின் மூலம் வளமையான தமிழ்நாட்டையும், வல்லரசான இந்தியாவையும் அமைப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+