போக்குவரத்துறையில் ரூ.56 லட்சம் மோசடி23 வருட வழக்கில் 11 பேருக்கு சிறை
தஞ்சை:கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ. 56 லட்சம் கையாடல் செய்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 11 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சோழன் போக்குவரத்துக் கழகம் என்று இருந்தபோது, கேஷியராகவும், மூத்த உதவியாளராகவும் வேலை பார்த்தவர் ராஜகோபால்(45). இவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்.
நிரா.நடராஜன் என்பவர் இதே அலுவலகத்தில் அக்கெளண்ெடண்டாக பணி புரிந்தார். இந்த இருவரும் சேர்ந்து கடந்த 1980-1983ம் ஆண்டில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
விசாரணையில் ரூ.56 லட்சம் அளவுக்க மோசடி நடந்தது உறுதியானது.
டிக்கெட் பணம், மோட்டார் உதிரி பொருட்கள் வாங்கியது உட்பட பலவற்றில் நிரா.நடராஜன், ராஜகோபால் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி பல ஆண்டுகளாக நடந்துள்ளது.
இந்த மோசடி குறித்து தஞ்சாவூர் குற்றப் பிரிவு போலீசில் அப்போதைய நிர்வாக இயக்குனர் இருளப்பன் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடராஜன், ராஜகோபால் மற்றும் அவர்களுக்கு பினாமியாக செயல்பட்டவர்கள் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே 4 பேர் இறந்துவிட்டனர்.
சுமார் 23 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்.
அதில், 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 11 பேரில் நடராஜன், ராஜகோபாலன் மற்றும் பினாமிகள் பழனிவேலு, கலியமூர்த்தி, மனோகரன், துரைராஜ், பார்த்தசாரதி ஆகியோருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ராஜகோபாலனின் மனைவி மல்லிகா, பிரேமகுமாரி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் மொத்தம் ரூ.7.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 குற்றவாளிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தஞ்சை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் நீதிபதி ஜபருல்லாகான் கும்பகோணம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.
தீர்ப்பளிக்கப்பட்ட 11 பேரில் 10 பேர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜகோபால் ஏற்கனவே சிறையில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications