சட்டீஸ்கரில் மாயமான ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு:விபத்துக்குள்ளாகி 4 பேர் பலி
ஜபல்பூர்:சட்டீஸ்கர் மாநில அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 பேர் பலியாகினர்.
கடந்த 14ம் தேதி சட்டீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் போபாலில் இருந்து 4 பேருடன் ரெய்ப்பூருக்கு கிளம்பியது.
ஆனால் அந்த ஹெலிகாப்டர் ரெய்ப்பூரை அடையவில்லை. இதையடுத்து கடந்த 4 நாட்களாக ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்தது.
தீவிர தேடுதலுக்குப் பின் அந்த ஹெலிகாப்டர் மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஐஜி ஜனார்தன் கூறுகையில்,
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மிகவும் அடர்த்தியுள்ள காட்டுப் பகுதியான பாலகாட் பகுதியில் கிடந்தது. இதில் பயணம் செய்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தப் பகுதி நக்சலைட்டுகள் அதிகம் நடமாடும் இடமாகும். ஹெலிகாப்டரை நக்சல்கள் சுட்டு வீழ்த்தினார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
