ஆபரேஷனுக்கு வந்த பெண்களை ஆபாசபடமெடுத்த கம்பவுண்டர்!!
காரியாபட்டி:அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை ஆபாச படமெடுத்து கம்பவுண்டர் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த 13ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அரசு மருத்துவமனையில் செல்வி, கச்சம்மாள், முருகேஸ்வரி, வெள்ளையம்மாள், கருப்பாயி, காந்திமதி ஆகியோருக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் நடந்தது.
ஆபரேசனுக்கு பின் அைரகுறை மயக்கத்தில் இருந்த செல்வியை மருத்துவமனை ஊழியர் ஆறுமுகம் தனது கேமரா மொபைல் மூலம் படமெடுத்தார். இதனை செல்வி பார்த்துவிட்டார். இதைத் தொடர்ந்து மற்ற 6 பெண்களையும் அரைகுறை உடையில் படமெடுத்தார்.
இதையடுத்து ஆறு பெண்களும் தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களோடு வந்து மருத்துவ அலுவலர் பத்மாவதியிடம் ஆறுமுகம் செய்த மோசமான செயலை புகாராக கூறினர்.
மேலும் காவல் நிலையத்திலும் செல்வி புகார் கொடுத்தார். இதையடுத்து ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார்.
அவரை காரியாபட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications