ஜெ. ஒரு ஆர்எஸ்எஸ் விசுவாசி- காங்கிரஸ்:3வது அணி உடைந்துவிட்டது- இடதுசாரிகள்
டெல்லி:உருவாகி 2 மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 3வது அணி உடைந்து போய் விட்டதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது என 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக மட்டும் இன்று தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போட்டது.
அதிமுகவின் இந்த தடாலடி போக்கு 3 வது அணித் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அதிமுகவின் செயலால், 3வது அணி உடைந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறுகையில், 2 மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 3வது அணி உடைந்து விட்டது. அதிமுக தனியாக போனதன் மூலம் இனிமேல் 3வது அணிக்கு எதிர்காலம் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனதளவில் ஒரு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசி ஆவார். அதைத்தான் தற்போது நிரூபித்துள்ளார்.
பிரதீபா பாட்டீல் 6 லட்சம் ஓட்டுக்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவார். ஷெகாவத்துக்கு 3 லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், 3வது அணி உடைந்து விட்டது. பிரதீபா பாட்டீல் மிகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்றார்.
மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி கூறுகையில், பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் 3வது அணியினரால் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் சாட்ட மட்டுமே முடிந்தது என்றார்.
இன்றைய தேர்தலில் 3வது அணியைச் சேர்ந்த அதிமுக மட்டுமே ஷெகாவத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் சொன்னது போல தேர்தலைப் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications