தொழிற்கல்வி சட்டம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பைஎதிர்த்து அப்பீல்- பொன்முடி
சென்னை:தமிழக அரசின் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது. இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
முதல் நாள் உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில் 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இடம் கிடைத்த மாணவ, மாணவியருக்கு பொன்முடி அதற்குரிய உத்தரவுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான அவசரச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்.
இதற்காக அரசுச் செயலாளர் டெல்லி சென்றுள்ளார். வக்கீல்களுடன் மனு தாக்கல் தொடர்பான ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். எத்தனை தொடங்குவது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பொன்முடி.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications