ஜனாதிபதி தேர்தல்-வாக்குப் பதிவு தொடங்கியது
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பைரான் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
இதனால் இரு முனைப் போட்டி நிலவுகிறது. இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. பெரும் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை வளாகங்களில் ஓட்டுப் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பிக்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.
காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 4,895 வாக்காளர்கள் (எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்) உள்ளனர். ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.
எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்கு மதிப்பு மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார். மற்ற தலைவர்களும் வாக்களித்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications