திரையரங்கில் ஒரு தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தியேட்டரில் படம் பார்தக்க வந்த கூலித் தொழிலாளி அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவருக்கு மனைவியும், 1 குழந்தையும் உள்ளனர்.

கூலித் தொழிலாளியான இவர் சம்பாதிக்கும் பணத்தை குடிபோதைக்கும், சினிமா பார்ப்பதற்கும் செலவளித்து வந்துள்ளார். வீட்டிற்கு பணமே கொடுக்கமாட்டாராம்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரியில் உள்ள தியேட்டரில் இரவு காட்சிக்குச் சென்றார். அப்போதும் நல்ல குடி போதையில் இருந்ததாக தெரிகிறது.

நள்ளிரவில் படம் முடிந்ததும் ஊழியர்கள் திரையரங்கை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

காலையில் வந்து தியேட்டரை திறந்து பார்த்தபோது சீனிவாசன் தான் உடுத்தியிருந்த கைலியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

சீனிவாசன் அவராக தூக்கில் தொங்கினாரா அல்லது வேறு யாரும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்திலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தியேட்டரில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும், விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+