ஜெயா டிவி பங்குதாரர் தலைமறைவுவைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
மதுரை:கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரரும், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபருமான வைகுண்டராஜன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். கடற்கரை மணலில் உள்ள தாதுக்களைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை இவர் நடத்தி வருகிறார்.
இந்த மணல் எடுப்பதில் பல முறைகேடுகளை இவர் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அதைத் தட்டிக் கேட்பவர்களை குண்டர்களைக் கொண்டு மிரட்டுவது உள்பட அடாவடிகளுக்கு பேர் போனவர்.
ஜெயா டிவியின் பெரும்பான்மையான பங்குகளும் இவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாக தாது மணலை கடத்த தனது லாரிகளை பயன்படுத்தியதாக கூறி வைகுண்டராஜன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார். தலைமறைவாக இருந்தபடியே தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரைப் பிடிக்க முடியாமல் காவல் துறை தவித்து வருகிறது.
இவரைப் பிடிக்க முயன்று வரும் தனிப் படையின் செயல்பாடுகளை வைகுண்டராஜனுக்கு காக்கிகளிலேயே சிலர் தகவல் தந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வைகுண்டராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகுண்டராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய் வழக்கு. பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக அரசு இந்த வழக்கைப் போட்டுள்ளதாக வாதாடினார். அரசுத் தரப்பில் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏற்கனவே வைகுண்டராஜனின் நிறுவனங்களில் பல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications