செட்டிநாடு மருத்துவ கல்லூரிக்குஇட ஒதுக்கீடு செல்லாது - உச்சநீதிமன்றம்
டெல்லி:செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் மட்டும் தமிழக அரசின் 65 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சுயநிதி கல்லூரி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் செட்டி நாடு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவு இந்த ஆண்டு மட்டும் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், அனைத்து இடங்களையும் நாங்களே நிரப்பிக் ெகாள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவலேகர், அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் அரசின் இட ஒதுக்கீடான 65 சதவீதத்தை அமல் படுத்த தேவையில்லை. மேலும் செட்டிநாடு கல்லூரி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அனைத்து இடங்களையும் அவர்களே நிரப்பி கொள்ளலாம் என தீர்ப்பளித்தனர்.
மேலும் மற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்சநீதிமன்றத்தை அணுகினால் அதற்கேற்றவாறு உரிய உத்தரவு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications