து.ஜனாதிபதி-வேட்பாளரை நிறுத்த பாஜக கூட்டணியும்முடிவு: மும்முனைப் போட்டி உருவாகிறது
டெல்லி:துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரை நிறுத்த தேசிய ஐனநாயக கூட்டணியும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தப் பதவிக்கு மும்முனைப் போட்டி ஏற்படப் போகிறது.
ஜனாதிபதி தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. ஆனால் அதில் பாஜக சார்பிலான சுயேச்சை ஷெகாவத்துக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. மூன்றாவது அணியை நம்பி களத்தில் இறங்கி பாஜக ஏமாந்தது.
இந் நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு பாஜக வந்தது. ஆனாலும் இறுதி முடிவெடுக்க பாஜக கூட்டணியின் மூத்தத் தலைவர்கள் மாஜி பிரதமர் வாஜ்பாயின் வீட்டில் கூடி விவாதித்தனர்.
இதில் அத்வானி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், அகாலி தள செயல் தலைவர் கபீர் பாதல், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ், சிவசேனா மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. பெண் வேட்பாளர் அல்லது முஸ்லீம், சீக்கியர், தலித் இவர்களில் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவரை நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
முன்னாள் ராஜ்யசபா துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் லோக்சபா துணை சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் ஆகியோரது பெயர்களும் பரீசிலிக்கப்பட்டன
இது குறித்து பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
வரும் 22ம் தேதி எங்கள் கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றார்.
ஏற்கனவே இந்தப் பதவிக்கு உ.பி மாநில எம்பியான ரஷீதை அறிவித்துவிட்டது மூன்றாவது அணி. அவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
அதே போல காங்கிரஸ் கூட்டணி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். வெல்லப் போவதும் இந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர் தான்.
இதனால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மும்முனைப் ேபாட்டி உருவாகிவிட்டது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications