சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடுதேவையில்லை-மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சிகரெட், பீடி பாக்கெட்டுகள் மீது மண்டை ஓடு அச்சிடத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது குடிப்பவர்களின் மனதை மாற்றும் வகையில் கண்டிப்பாக மண்டை ஓடு சின்னத்தை அபாயச் சின்னமாக அச்சிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் திடீரென டில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பீடி, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது மண்டை ஓடு சின்னம் தேவையில்லை. அதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு சின்னத்தை அச்சிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் ப்ரியரஞ்சன்தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
இது குறித்த மசோதாவை வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக ராமதாஸூக்கு ஒரு போராட்டம் ரெடியா?












Click it and Unblock the Notifications