து.ஜனாதிபதி தேர்தல்-16 பேர் மனு தாக்கல்:தமிழக டாக்டரின் மனு தள்ளுபடி
டெல்லி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 16 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் நேற்று மனுதாக்கல் செய்தார்.
இதுவரை மனு தாக்கல் செய்துள்ளவர்களில் மசூத்தைத் தவிர மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். காரணம், அவர்களுக்கு ஆதரவாக முன்மொழிந்தும், வழிமொழிந்தும் எம்.பிக்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மசூத் தவிர மேலும் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். டெல்லியைச் சேர்ந்த டாக்டர் குரு கியான் காந்தி ஹரீஷ் சந்திர துவா என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே இருமுறை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தனது மனுவுடன் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் உள்ளதற்கான சான்றிதழை அவர் இணைக்கவில்லை. இதனால் அந்த மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன.
நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதற்கான சான்றிதழை இணைத்திருந்தார். இதையடுத்து அவரது மனு பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
அதேபோல, வேலூரைச் சேர்ந்த டாக்டர் சந்திரவதனன் என்பவரும் மனு தாக்கல் செய்தார். ஆனால் தனது மனுவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதற்கான சான்றிதழை இவர் இணைக்கவில்லை. மேலும் டெபாசிட் தொகையும் கட்டவில்லை. எனவே இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசித் தேதி 23ம் தேதியாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications