ராமர் பாலம்: போராட்டம் குறித்து தீர்மானிக்கவி.எச்.பி., துறவிகள் மாநாடு
போபால்:ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
போபாலில் நடந்த வி.எச்.பி. மாநாட்டில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் டொகாடியா கூறுகையில், பாரம்பரிய சின்னமான ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்து உணர்வுகளை இழிவுபடுத்தியுள்ளனர்.
ராமர் பாலத்தை இடிப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் போர்க் கப்பல்கள் இந்தப் பாதை வழியாக செல்லும் வாய்ப்புகள் உருவாகும். இது நமது நாட்டுக்கு ஆபத்தானது.
ராமர் பாலம் இந்தியாவின் பாரம்பரியச் சின்னமாகும். இந்த சின்னத்தை இடிக்காமலேயே சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆகஸ்ட் 12ம் தேதி இந்துக்கள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
ராமர் பால விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவே டெல்லியில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் டொகாடியா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications