குரூப் பி அதிகாரிகளும் அட்டஸ்டேஷன் செய்யலாம்
சென்னை:சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களில் இனிமேல் குரூப்-பி அதிகாரிகளும் கையெழுத்து போடலாம் என தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது.
கல்லூரிகள் மற்றும் அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள், தங்கள் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்தின் மீதும் பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரம் கொண்ட உயரதிகாரிகளிடம் (கெசட்டட் ஆபிஸர்) மட்டுமே சான்றொப்பம் வாங்க வேண்டும்.
இதுவரை குரூப் ஏ அதிகாரிகளுக்கு மட்டுமே அட்டஸ்டெசன் கையெழுத்திட அதிகாரம் இருந்தது. ஆனால், இப்போது குரூப்-பி அதிகாரிகளும் அட்டஸ்டெஷன் செய்யலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரசு துறைகளில் பணியாற்றும் கணகாணிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான பதவி வகிப்பவர்கள், துணை தாசில்தார்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி வணிக வரி அதிகாரிகள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், தலைமைச் செயலகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவி பிரிவு அலுவலகர்கள் (ஏ.எஸ்.ஓ), அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஜூனியர் என்ஜீனியர்கள் மற்றும் ரூ.5,500 அடிப்படை சம்பளம் பெறும் இதர அதிகாரிகள் அட்டஸ்டெசன் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications