கட்சி மாறி ஓட்டு-பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்த 5 பாஜக எம்எல்ஏக்களை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஆங்காங்கே கட்சி மாறி வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழகத்திலும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் மாறி ஓட்டு போட்டனர். அதே போல ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இருவர் பிரதீபாவுக்கு வாக்களித்தனர்.
குஜராத்தில் தான் நிலைமை மிக மோசம். அங்கு முதல்வர் நரேந்திர மோடியின் அரசியலை கண்டிக்கும் வகையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பிரதீபாவுக்கு வாக்களித்தனர்.
இந் நிலையில் இவர்களில் 5 எம்எல்ஏக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications