சங்கரன்கோவிலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு-ஒருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் இன்று காலை வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சங்கரன்கோவிலில் பெயர் பெற்ற சங்கர நாராயணன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

விழாவின் சிறப்பம்சமாக ஆடித்தபசு இன்று கொண்டாடப்பட்டது. ஏற்கனவே இந்த ஊரில் இரு தரப்பினருக்கிடேயே கடந்த 10 வருடங்களாக முன் விரோதத்தால் மோதல் இருந்து வருகிறது. வழக்கமாக இந்த திருவிழாவின்போது இரு தரப்பினரும் மோதிக் கொள்வது வழக்கம் என்பதால் திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் வீரபுத்திரன் என்பவர் மீது இன்று காலை எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பெட்ரோல் பங்க் அருகே விழுந்து இந்த குண்டுகள் வெடித்ததால் அங்கு பெரும் பீதி நிலவியது.

இத் தாக்குதலில் வீரபுத்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+