சொத்து குவிப்பு வழக்கு-அமைச்சர் கோ.சி.மணி விடுதலை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோ.சி.மணி விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவர்களில் ஒருவருமான கோ.சி.மணி மீது கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. தனது வருமானத்தை மீறி மணி சொத்து சேர்த்ததாக கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம், கோ.சி.மணி மற்றும் மறைந்த அவரது மனைவி கிருஷ்ண வெள்ளையம்மாள் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்பின்போது மணியும் நீதிமன்றத்தில் இருந்தார். இதன்மூலம் நீதி வென்றுள்ளதாக பின்னர் நிருபர்களிடம் மணி கூறினார்.












Click it and Unblock the Notifications