மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்ஸல்வேட்டை: விஜயகுமார் நேரில் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் போலீசார் நக்ஸலைட் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்தின் பெரியகுளம் மலைப் பகுதிகளில் 3 நக்சலைட்டுகள் பிடிபட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் காட்டுப் பகுதிகளில் நக்ஸல்கள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்காக அதிரடிப்படை போலீசாருக்கு மணிமுத்தாறில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியையம் தேடுதல் வேட்டையையும் மேற்பார்வையிட கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் மணிமுத்தாறு வந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசாருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதி காடுகளில் நான் நேரில் சென்று தேடுதல் வேட்டை நடத்தப் போவதில்லை.

இப்பகுதியில் நக்சலைட்கள் இருப்பதற்கான தடயங்கள் சிக்கவில்லை. ஆனாலும் தமிழகம் முழுவதும் உள்ள காடுகளில் நக்சலைட்கள் தேடுதல் வேட்டை நடைபெறும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+