போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தால் உயிர் விட்டமாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் நிலை குலைந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து பலியான 17 மாஞ்சோலை தலித் தொழிலாளர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1999ம் வருடம் ஜூலை 23ல் சம்பள உயர்வு கேட்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலியில் பேரணி நடத்தினர். அவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில், கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

Krishnaswamyy

இந்த பேரணியின் போது தொழிலாளர்களை போலீசுக்கும் திடீரென தாக்கினர்.

குழந்தைகளும் பெண்களும் ஏராளமான கலந்து கொண்ட இந்த பேரணியில் பேரணியின் மீது போலீசார் நடத்திய தடியடியை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிதறி ஓடினர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெள்ளம் ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். அதில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.


போலீசாரின் இந்த கேவலமான செயல் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் ஜூலை 23ம் தேதி தாமிரபரணி ஆற்றில் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் இந்த வருடமும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதால் நேற்று தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பாமக மாநில துணை தலைவர் கசாலி, பாட்டாளி தமிழர் முன்னணி நிளுவனர் வியனரசு, நெல்லை ஜமாத் நியமத்துல்லா,

மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் புரட்சிகவிதாசன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் தேவேந்திரன் உட்பட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தாமிரபரணி ஆற்றில் இறந்த தொழிலாளர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

ரிலையன் வசம் மாஞ்சோலை தோட்டம்:

இந் நிலையில் புதிய தமிழக கட்சியின் சார்பாக நேற்று இரவு பொதுக் கூட்டமும் நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.

இக் கூட்டத்தில், நெல்லை மாவட்டம், அம்பையில் இருக்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பதை தடுத்து, அத்தோட்டத்தை தொழிலாளர்களுக்கே பிரித்துக் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+