பாலித்தீன் பைகளில் பெண் சிசுக்களின்பிணங்கள்: ஒரிஸ்ஸா பயங்கரம்
புவனேஸ்வர்:ஒரிஸ்ஸாமாநிலத்தில் பாலீத்தீன் பைகளில் பச்சிளம் குழந்தைகளின் பிணங்களை திணித்து குப்பையில் வீசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கடந்த 14ம் தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன.
இவையனைத்தும் பிறந்தவுடனே கொல்லப்பட்டவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநில அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபிசிஐடி போலீஸார் நயகர் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தியதில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் இருக்கும் நபகன்பூர் கிராமத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
அங்குள்ள 36 தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தியும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் இருந்து குப்பையில் போடப்படும் பொருட்களை போலீஸார் தோண்டி எடுத்து சோதித்தனர்.
அப்போது ஒரு மருத்துவமனையின் கழிவுகள் கொட்டும் இடத்தில் பாலீதின் பைகள் நன்றாக கட்டப்பட்ட புதைக்கப்பட்ட நிலையில் இருந்தன.
சந்தேகமடைந்த போலீஸார் அவற்றை தோண்டி எடுத்தனர். ஆனால் தோண்ட தோண்ட பிளாஸ்டிக் பைகள் வந்து கெண்டிருந்தன.
அந்தப் பைகளை திறந்து பார்த்தபோது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பைகளில் பிறந்த சிசுக்களின் தலை, கால் உள்ளிட்ட உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தன. சிலவற்றில் எலும்புகளும் கிடைத்தன.
மொத்தம் 122 பாலீத்தின் பைகளை கைப்பற்றிய போலீசார் அவற்றில் 30 பைகளில் பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த உடல்கள் தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பெண் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை ஒன்றின் மேலாளர் சியாமா சாகு என்பவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications