நாளை பிற்பகலில் பிரதீபா பதவியேற்பு
டெல்லி:இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் நாளை பிற்பகல் பதவியேற்கவுள்ளார்.
![]() |
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகும் பெருமையைப் பெறுகிறார் பிரதீபா பாட்டீல்.
நாளை பகல் 2.30 மணிக்கு பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக பிரதீபா பாட்டீல் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து வரப்படுகிறார். அவருடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் உடன் வருவார்.
அவரை பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் வாசலில் நின்று வரவேற்கின்றனர்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், எம்.பிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ேடார் பங்கேற்கின்றனர்.













Click it and Unblock the Notifications