பிளாட்பாரத்தில் இரவில் பெண்ணிடம் சில்மிஷம்-தடுத்தவரை கொன்ற சிறுவன்
சென்னை:பிளாட்பாரத்தில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சிறுவனை தட்டிக் கேட்டவர், அந்த சிறுவனாலேயே கொல்லப்பட்டார்.
சமீப காலமாக சென்னையில் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (19). ஸ்டீல் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து சினிமா பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்தவன் மோகன்(15). இவன் இரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களோடு கூட்டத்தோடு கூட்டமாக படுப்பதை வழக்கமாக கொண்டவன்.
நேற்று முன் தினம் இரவு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தா என்ற பெண்ணின் பக்கத்தில் போய் படுத்து மோகன் சில்மிஷம் செய்துள்ளான்.
இதையடுத்து வசந்தா அவனை தாறுமாறாக திட்டியுள்ளனர். இவர்கள் இரவில் சண்டை போடுவதை பார்த்த வேலுவும், வெங்கடேசனும் விசாரித்து சிறுவன் மோகனை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் பக்கத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வேலுவையும், வெங்கடேசனையும் விரட்டியுள்ளான். அவர்கள் இருவரும் பயந்து ஓடியுள்ளனர்.
இதில் வேலு ஓடும்போது தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து வேலுவின் மீது ஏறி அமர்ந்து அவரது தொண்டையில் கத்தியால் பலமுறை குத்தினான்.
இதில் வேலு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி, கத்தியுடன் ஓடிக் கொண்டிருந்த மோகன் மீது சந்தேகப்பட்டு அவனை விரட்டிச் சென்று பிடித்தார்.
சிறுவன் மோகனுக்கு போதை பழக்கங்களும், பெண்களிடம் தகாத உறவும் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அண்ணன், அண்ணியை தாக்கிய தம்பி:
ஆவடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். மத்திய அரசு ஊழியரான இவருக்கு 2 மகன்கள்.
மூத்தவர் பெயர் ஜான்(24). இவரது மனைவி சந்தானபிரியா. ஜானின் தம்பி மோசஸ்(17). இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
ராமதாஸ் தனியார் பாங்கில் கடன் பெற்று கட்டாமல் இருந்திருக்கிறார். வங்கியில் இருந்து வாங்கிய கடனை கேட்டு அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது ராமதாஸ் வீட்டில் இல்லை. ஜானிடம் கடன் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு ஜான் எனக்கு அதைப்பற்றியெல்லாம் ஒன்னும் தெரியாது. என் தம்பி மோசஸூக்கு தான் எல்லாம் தெரியும், அவனிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை கட்டாவிட்டால் உங்கள் அப்பா மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு சென்றனர்.
அவர்கள் அனைவரும் போனபின்பு, ஜானிடம் மோசஸ் அப்பாவைக் கேட்டால் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே, அதற்கு ஏன் பாங்க் ஆட்களிடம் என்னை மாட்டி விட்டாய் என கேட்டுள்ளான்.
இதையடுத்து அண்ணன், தம்பி இருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு முற்றியது.
இதைத் தொடர்ந்து உருட்டுக் கட்டையால் அண்ணனை தம்பி மோசஸ் தாக்கினார். அதைத் தடுக்க வந்த அண்ணி சந்தானபிரியாவுக்கும் அடி விழுந்தது.
இதில் இருவரும் மண்டை உடைந்து பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஆவடி போலீசார் சிறுவன் மோசஸை கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications