தென்காசி: காவல் நிலையம் அருகேகள்ள நோட்டு கடை: 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தென்காசி:திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Seized fake notes and the culprits in police custory

தமிழக-கேரள எல்லை பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதையடுத்து உளவுப் பிரிவினர் விசாரணையில் இறங்கினர். அப்போது காவல் நிலையத்துக்கு அருகேயுள்ள லங்கா ஜெராக்ஸ் என்ற கடையில் இந்த கள்ள நோட்டு பரிவர்த்தனைகள் நடப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி மயில்வாகணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார், வருவாய் துறையினருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கடையின் உரிமையாளர் ரம்ஜான் அலி, விருதுநகரைச் சேர்ந்த ஜேக்கப் எபனேசர், கல்லாத்தி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய மூவரிடம் இருந்து ரூ. 25,000 மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டு கரன்சிகள் பிடிபட்டன.

இவர்களிடம் ரூ. 10,000 நல்ல நோட்டுகளை கொடுத்தால் ரூ.50,000 மதிப்புக்கு கள்ள நோட்டுகள் தருவார்களாம். பல ஆண்டுகளாக காவல் நிலையத்துக்கு அருகில் இருந்தபடியே இவர்கள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+