புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி 14 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வட பகுதியில் சண்டை வலுத்துள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில், ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தில் 30 வீரர்கள் இருந்தனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில், பேருந்து தூக்கி எறியப்பட்டது.
இதில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications