கேந்திரிய வித்யாலாயா மாணவி பலாத்காரம்பெற்றோர் போராட்டம்-பள்ளி ஊழியர் கைது
சென்னை:
சென்னை கே.கே.நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 வயது மாணவியை, பள்ளி ஊழியர் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த ஊழியரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியையும் டிஸ்மிஸ் செய்து கைது செய்யக் ேகாரி பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.கே.நகரில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான கேந்திரிய வித்யாலயா உள்ளது. இங்கு படித்து வரும் 8 வயது மாணவி ஒருவரை பள்ளிக்கூட ஊழியரான செல்வராஜ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆவசேமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பிற மாணவிகளின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர்.
பள்ளி முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் இறங்கிய அவர்கள், மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ள செல்வராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த ஒரு ஆசிரியை உள்ளிட்ட மேலும் 3 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அங்கு விரைந்து வந்த போலீஸார் செல்வராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம்
இதற்கிடையே செல்போன் இருக்கிறதா என்று பார்ப்பதாகக் கூறி மாணவிகளின் ஆடைகளை கழற்றச் சொல்லி செக்ஸ் சில்மிஷச் செயலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சீபுரத்தில் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் அரசினர் மேநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சிவமுனுசாமி என்பவரும், உதவி தலைமை ஆசிரியராக ஜிக்கி என்பவர் உள்ளனர். தலைமை ஆசிரியர் செக்ஸ் வக்கிரப் புத்தி கொண்டவராம். உதவி தலைமை ஆசிரியர் ஜிக்கியை அடிக்கடி கூப்பிட்டு, மாணவிகளிடம் செல்போன் இருக்கிறதா என்று சோதனை போடச் சொல்வாராம்.
ஜிக்கியும் மாணவிகளிடம் செல்போன் இருக்கிறதா என்று சோதிப்பார். அப்போது அருகே இருந்து மாணவிகளை ரசிப்பாராம் சிவமுனுசாமி. சில சமயம் அவரே மாணவிகளை தொட்டு செல்போன் சோதனை நடத்துவாராம்.
இவரது இந்த பாலியல் சேஷ்டையால் மாணவிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில், பிளஸ்டூ படிக்கும் கிஷோர் பாபுசிங் என்பவரது மகள் திவ்யாவை தனது அறைக்கு வரவழைத்துள்ளார்.
செல்போன் மறைத்து வைத்துள்ளாயா என்று கேட்டு ஆடைகளை கழற்றக் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு திவ்யா மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சிவமுனுசாமி, திவ்யாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து திவ்யா தனது பெற்றோரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். ஆவேசமடைந்த கிஷோர்பாபு சிங், தனது மகளைப் போல பாதிக்கப்பட்ட பிற மாணவிகளிடம் கையெழுத்து வாங்கி ஆட்சித் தலைவர் பிரதீப் யாதவுக்கு புகார் மனு அனுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பிற மாணவிகளின் பெற்றோருடன் இணைந்து பள்ளிக்கூடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால் இந்தப் புகாரை சிவமுனுசாமி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவி திவ்யா உட்பட அவரது தோழிகள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் பேக்கரியில் ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதாக எனக்கு புகார் வந்தது.
மேலும் மாணவிகள் வகுப்பறையிலேயே செக்ஸ் புத்தகங்களை வைத்துப் படிக்கின்றனர், காதல் கடிதங்களை எழுதுகின்றனர். இவர்களின் இந்த செயல்களுக்கு எல்லாம் ஒரு ஆசிரியை உடந்தை வேறு.
மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என கண்டித்தால் அவர்கள் பழியை எங்கள் மீதே திருப்பி விடுகிறார்கள் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமானுஜம் கூறுகையில், பெரிய காஞ்சீபுரம் அரசு மகளிர் மேநிலைப்பள்ளியில் மாணவிகள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக பெற்றோரிடம் இருந்து புகார் வந்துள்ளது.
இந்த புகார் மீது விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி கோவிந்தராஜிக்கு (பொறுப்பு) உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தப்படும்.
தவறு செய்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து நேற்று சுமார் ஐந்து மணி நேரம் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications