வானியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர்பட்டியலில் சேர்க்க கோரி உண்ணாவிரதம்
சென்னை:வானியர் சமுகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பெரும் திரளானோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தங்களது போராட்டம் குறித்து வானியர் சங்க தலைவர் தண்டபானி செட்டியார் கூறுகையில், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலனவர்கள் வசதியில்லாது, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்குக் கூட அனுப்ப முடியாத சூழலில் இருக்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக எங்களது நிலையில் மாற்றமே இல்லை.
எங்களது சமூகம் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புப் பட்டியலில் உள்ளது. எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றக் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இதுதொடர்பாகவே இந்தப் போராட்டம். விரைவில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications