5 வயதில் பெல்ஜியம் தம்பதிக்கு தத்து:23 வயதில் பெற்றாரை தேடி வந்த இளைஞர்!
கோவை:5 வயது குழந்தையாக இருந்தபோது பெல்ஜியம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவர் இப்போது 23 வயதில் மீண்டும் தனது சொந்தப் பெற்றோரைத் தேடி கோவைக்கு வந்து, அவர்களை அடையாளம் கண்டு இணைந்துள்ளார் ஒரு வாலிபர்.
ஷாட் 1:
கோவை அசோக் நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. அதன் பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆளுக்கு ஒரு மகனுடன் கணவனும், மனைவியும் பிரிந்து விட்டனர்.
தன்னிடம் வந்த ஐந்து வயது மகன் முருகேஷுடன் வறுமையில் வாடி வந்தார் சாந்தா. வறுமையின் கொடுமை உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த நிலையில், கோவை பெரியகடை வீதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் மையத்தில் தனது குழந்தையை விட்டார்.
![]() |
ஷாட் 2:
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தம்பதி சார்ல்ஸ் கவாலியர் மற்றும் ரோஸா ரெனியாரா. 1984ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கோவைக்கு வந்த இவர்கள், முருகேஷை தத்தெடுத்தனர். தங்களுடன் பெல்ஜியம் அழைத்துச் சென்றனர்.
முருகேஷின் பெயர் டாம் கவாலியர் என மாறியது. கவாலியர் தம்பதியின் செல்ல மகனாக வளரத் தொடங்கினார் முருகேஷ். எலக்ட்ரிகல் படிப்பில் டிப்ளமோ பட்டமும் பெற்றார்.
ஷாட் 3:
தனது பெற்றோர் கோவையில் இருப்பதையும் அறிந்த டாம் கவாலியர் என்ற முருகேஷ், தனது ஒரிஜினல் பெற்றோரை நேரில் சந்திக்க விரும்பி இந்தியாவுக்கு கிளம்பினார்.
அதுவும் எப்படி?.. ஒரே ஒரு கேரி பேக்குடன் பெல்ஜியத்திலிருந்து இந்தியா வந்த முருகேஷ் ஜூலை 14ம் தேதி கோவை விமான நிலையம் வந்து இறங்கினார்.
வெளிநாட்டில் இருந்து பேக்கேஜ் ஏதும் இல்லாமல் வெறும் ஒரு பிளாஸ்டிக் கேரி பேக்குடன் வந்திறங்கிய வாலிபரைக் கண்டு சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் முறையானதுதானா என சோதித்தனர். அனைத்தும் சரியாக இருக்கவே அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
ஷாட் 4:
தனது பெற்றோரைக் கண்டுபிடிக்க பல வழிகளைக் கையாண்ட முருகேஷ், பத்திரிக்கைகளின் உதவியையும் நாடினார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த முருகேஷ்,
1980ம் வருடம் பிறந்த என்னை கோவை பெரிய கடைவீதியில் உள்ள ஒரு அனாதை விடுதியில் எனது பெறோர் என்னை ஒப்படைத்துள்ளனர். பிறந்ததில் இருந்து 4 வருடம் அனாதை விடுதியில் தான் வசித்து வந்தேன்.
கடந்த 1984ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் தம்பதி என்னை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தனர். நான் பெல்ஜியத்தில் படித்து பட்டம் பெற்று பின்பு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறேன். எனது வளர்ப்பு பெற்றோர் பெல்ஜியத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
3 மாதங்களுக்கு முன்பு தான் எனது ஒரிஜினல் பெற்றோர் குறித்த விவரம் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களைத் தேடித்தான் நான் இங்கு வந்துள்ளேன்.
எனது தத்துப் பெற்றோர் என்னைப் போலவே கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு சிறுமியையும் தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். என்னை விட அந்த சிறுமி மீதுதான் அவர்களுக்குப் பாசம் அதிகம்.
நான் கேவைக்கு கிளம்பி வந்துவிட இதுவும் ஒரு காரணம் என்றார்.
ஷாட் 5:
பின்னர் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கிய முருகேஷ், தத்துப் பெற்றோர் கொடுத்த அடையாளங்களை வைத்து தான் இருந்த அனாதை இல்லத்தைக் கண்டுபிடித்தார்.
அங்கு போய் விசாரித்தார். ஆனால் அங்குள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.
ஆனால், ஒரிஜினல் பெற்றோர் குறித்த விவரங்கள் அங்கு கிடைக்கவில்லை. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்தார் முருகேஷ்.
கிளைமாக்ஸ்:
இந் நிலையில் முருகேஷின் சித்தப்பா சண்முகம் மற்றும் அவரது அண்ணன் சங்கருக்கு, முருகேஷ் குறித்து பத்திரிக்கைகள் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் முருகேஷைத் தேடி கிளம்பினர். ஒருவழியாக அனாதை இல்லத்தில் நேற்று மூன்று பேரும் சந்தித்துக் கொண்டனர். உணர்ச்சிப் பெருக்கில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அழுதனர்.
சாந்தாவை விட்டுப் பிரிந்து சென்ற அவரது கணவர் கணேஷுக்கும் தகவல் போய் அவரும் ஓடி வந்தார். சாந்தாவை விட்டுப் பிரிந்து சென்ற கணேஷ் 2வது கல்யாணம் செய்து ெகாண்டார். அவருக்கு இரு குழந்ைதகளும் உள்ளனர்.
அத்தனை பேரும் ஒன்று சேர்ந்ததால் அந்த இடமே உணர்ச்சிமயமாக காணப்பட்டது. முருகேஷுக்குத் தமிழ் சுத்தமாக தெரியவில்லை. இருந்தாலும் அவர் விட்ட கண்ணீரில் கலந்து வந்த உணர்ச்சி, அவரது ஏக்கத்தை வெளிப்படுத்தியது.
அப்பா, அண்ணன், சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை உள்ளிட்ட அனைவரையும் பார்த்து விட்ட சந்தோஷத்தில் இருந்த முருகேஷ் அடுத்ததாக அனைவரோடும் சேர்ந்து தாயாரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
அப்ேபாது கோவை புதூர் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் தாயார் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தனது தாயை சந்திக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் முருகேஷ்.
முருகேஷை இனி பெல்ஜியம் அனுப்ப மாட்டேன் என்று அவரது அண்ணன் சங்கர் கூறியுள்ளார். ஆனால் என்னை நம்பி அங்கு ஒரு குடும்பம் உள்ளது. நண்பர்கள் உள்ளனர். எனவே நான் மீண்டும் பெல்ஜியம் திரும்பி விடுவேன்.
எனது தாயாரையும் நான் பார்த்த பிறகு தான் எனது தேடல் முடியும் என்று உணர்ச்சிவசப்பட்டவராக கூறுகிறார் முருகேஷ்.













Click it and Unblock the Notifications