ஜெ. ஆட்சியில் விதி மீறி கட்டப்பட்டபிளசன்ட் ஸ்டே ஹோட்டலை இடித்துதள்ள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை:விதிமுறைகளை மீறி கடந்த ஜெயலலிதா தலைமையிலான முதலாவது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலின் 4 தளங்களை இடித்துத் தள்ள சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் கொடைக்கானலில் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டது.
![]() |
ரூ. ஒன்றே முக்கால் கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த ஹோட்டலில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கட்ட மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் விதிமுறைகளை மீறி கூடுதலாக நான்கு தளங்கள் கட்டப்பட்டன.
இதையடுத்து பின்னர் வந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சென்னை தனி நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு வெளியான நாளில்தான் தர்மபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்தை அதிமுகவினர் தீவைத்து எரித்து 3 மாணவிகளைக் கொலை செய்தனர்.
இந்த நிலையில், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலை இடித்துத் தள்ளக் கோரி 1995ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனி மலை பாதுகாப்பு அமைப்பு என்ற தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முற்றிலும் விதிமுறைக்குப் புறம்பாக கட்டப்பட்டதாகும்.
அதிமுக ஆட்சியில் இந்த ஹோட்டலை கட்டுவதற்கு வசதியாக, நகராட்சி நிர்வாக சட்டத்தின் 3வது பிரிவைத் திருத்தியுள்ளனர். இது சட்டவிரோதமாகும். எனவே ஹோட்டலை இடிக்க உத்தரவிட வேண்டும். சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், பிளசன்ட் ஸ்டே ஹோட்டலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 தளங்களையும் 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள வேண்டும்.
இதுதொடர்பான செலவை, ஹோட்டல் உரிமையாளர் ராகேஷ் மிட்டலிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
ஹோட்டல் கட்டுவதற்காக விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது, எனவே அது ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!













Click it and Unblock the Notifications