அடுத்த வாரம் மத்திய அமைச்சராகிறார் கனிமொழி?
டெல்லி:முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று திமுக ராஜ்யசபா எம்.பியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் கனிமொழி மத்திய அமைச்சராகக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![]() |
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகியோர் இன்று ராஜ்யசபா எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான் கான் இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இடது சாரித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![]() |
இந் நிலையில் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.
திமுக சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து வந்த தயாநிதி மாறன், அழகிரி விவகாரத்தால் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது.
இருந்தாலும் அவர் தொடர்ந்து திமுக எம்.பியாகவே நீடித்து வருகிறார்.
தயாநிதி மாறன் வசம் இருந்த தொலைத் தொடர்புத் துறை ஏ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் துறை பிரதமர் வசம் உள்ளது. அது வேறு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்படவுள்ளது.
ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள ரகுமான்கான் மத்திய அமைச்சராகிறார். இதுதவிர முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவை கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் தோற்கடித்த காங்கிரஸ் எம்.பி. தேஜஸ்வினிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
அப்போது கனிமொழியும் அமைச்சராக்கப்படுவார் என்று தெரிகிறது.
ராசா வசம் உள்ள தொலைத் தொடர்புத்துறை அல்லது பிரதமர் வசம் உள்ள சுற்றுச்சூழல் துறை அவருக்கு வழங்கப்படலாம்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!














Click it and Unblock the Notifications