பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்ேபாது அவர் கூறுகையில், பிரதமரை சந்தித்தபோது நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தேன். கடந்த முறையை விட இந்த முறை விரிவாகவே பேசினேன்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநில முதல்வர்களை அழைத்து மாநாடு நடத்தி கருத்தறிய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அனைவரும் இதை ஏற்பார்களா என்று அப்போது பிரதமர் சந்தேகம் எழுப்பினார்.

அதற்கு நான், முதல் கட்டமாக யார் எல்லாம் சம்மதிக்கிறார்களோ அவர்களை அழைத்துப் பேசலாம் என்று யோசனை தெரிவித்தேன். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிதாக ஒரு அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அந்த அணை கட்டப்பட்டால் தமிழக மக்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்பதையும் பிரதமரிடம் விளக்கினேன்.

அதற்கு பிரதமர், இதுகுறித்து தான் ஒரு யோசனை வைத்திருப்பதாகவும், இரு மாநில முதல்வர்களையும் அழைத்து அதைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார். இந்தப் பிரச்சினை குறித்து விரிவான, விரைவான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட 3 மாநிலங்களும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதால், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு அவசரப்பட்டு முடிவெடுத்து, நியாயத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் அமைய வேண்டும் என்ற தீர்மானம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த தாமதத்தைப் போக்கவும், தடைகளை நீக்கவும், தமிழ் மொழிக்கு உரிய பெருமை சேர்க்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதுகுறித்து தனி கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள்:

கேள்வி: மக்கள் பிரச்சினை தொடர்பாக பாமக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு வாய்ப்பூட்டு போடக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளாரே?

கருணாநிதி: அண்ணா ஒருமுறை சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது. அண்ணா தலைமையிலான சுதந்திரா கட்சி, சோசலிஷ கட்சி இணைந்து மாபெரும் வெற்றி பெற்றோம். அதை மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு அண்ணா பதிலளிக்கையில், எனது அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்வது, பூனை தனது குட்டியை எவ்வாறு மென்மையாக கவ்வி எடுத்துச் செல்லுமோ அதுபோல சில கட்சிகள் தெரிவித்தன. சில கட்சிகள் பூனை எலியைப் பிடிப்பது போல கண்டிக்கின்றன என்றார் அண்ணா. நானும் அண்ணாவிடம் பயின்றவன் தான்.

கேள்வி: அப்படியானால் பாமக பூனையா, எலியா?

கருணாநிதி: புலி. சீண்டினால் புலி என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியும்.

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் 3வது அணி ...

கருணாநிதி: இருக்கிற அணிகளைப் பற்றிப் பேசுங்கள்.

கேள்வி: 3வது அணியினரின் முடிவுக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டதால், அந்த அணியில் உள்ள தலைவர்கள் ஆத்திரத்துடன் உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

கருணாநிதி: நான் அறிவுரை கூறாமலேயே உண்மைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவாளிகள் அவர்கள்.

கேள்வி: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உங்களது மகள் கனிமொழி பரிவுடன் உதவியிருக்கிறார். அதை பலர் பாராட்டியுள்ளார்களே..

கருணாநிதி: நானும் கேள்விப்பட்டேன்.

கேள்வி: கனிமொழி இன்றே தனது பணியை தொடங்கி விட்டாரா?

இதற்குப் பதில் அளிக்காமல் அந்தக் கேள்வியைக் கேட்ட நிருபரின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி புன்னகையுடன் பேட்டியை முடித்துக் கொண்டார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+