கஞ்சா: 18வது வழக்கில் கன்னட பிரசாத் கைது
சென்னை:கஞ்சா வைத்திருந்ததாக மாமா கன்னட பிரசாத் மீது வழக்குத் தொடரப்பட்டு அதில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாய்ந்துள்ள 18வது வழக்கு இதுவாகும்.
பெண்களை வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து பின்னர் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தவர் கன்னட பிரசாத். பல காலமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வந்த கன்னட பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.அவருடன் அவரது 3வது மனைவி குசூமும் கைது செய்யப்பட்டார். இதில் குசூம் ஜாமீனில் விடுதலையாகி வந்து விட்டார். பிரசாத் மட்டும் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மொத்தம் 17 வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விபச்சார வழக்குகள் ஆகும்.
இந்த நிலையில் கன்னட பிரசாத் மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு போலீஸார் கன்னட பிரசாத்தைக் கைது செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பின்னர் கன்னட பிரசாத் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். போதைப் பொருள் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அந்த கஞ்சா வழக்கை தற்போது கன்னட பிரசாத் மீது போலீஸார் போட்டு 18வது முறையாக அவரைக் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications