ஜெயலலிதாவின் ஜனநாயகக் குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தவறுகளை சுட்டிக்காட்டினால் எதிர்க்கட்சியினர் மீது காவல்துறை வைத்து தாக்குதல் நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர் குற்றம் சாட்டுகிறார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய ஜனநாயகத்தில் எழுத்துக்கும், பேச்சுக்கும் அதிக மதிப்பிருக்கிறது. அந்த வகையில் நியாயமான கருத்துக்களை எடுத்து சொல்வதற்கும், ஆளும் கட்சியின் தவறான போக்குகளை மக்களிடம் எடுத்து விளக்குவதற்கும் பேச்சாளர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் தலைமை கழகப் பேச்சாளர் நெத்தியடி நாகையன் பேசினார். அவருடைய பேச்சு ஆளும் கட்சி செய்யும் அராஜகத்தை மக்கள் உணரும்படி அமைந்துவிட்டது.

கூட்டத்திற்கு பின்னர் நெல்லையில் தங்கியிருந்த அவரை, தூத்துக்குடி போலீசார் எட்டையபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து, விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தற்போது பாளை சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு பேச்சாளர் ஆளும் திமுக அரசின் அட்டூழியங்களை பொதுக் கூட்டத்தில் பேசினால், அதற்காக காவல் துறையை ஏவிவிட்டு தாக்கி சிறையில் அடைப்பது எந்தவிதத்தில் நியாயம்.

திமுக அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை இது காட்டுகிறது. இதேபோல் தான் கடலூரில் அதிமுக இலக்கிய அணி நடத்திய பட்டிமன்றத்தில் நடுவராக இருந்த அதிமுக இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் உள்பட 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்திலும் கலைச்செல்வன் என்ற கழக பேச்சாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நீங்கள் செய்வது அராஜகம். அதை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகளின் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் நாகரீகமா. இது தான் ஜனநாயக நாட்டில் நடக்கும் அரசியலோ

அதிமுக பேச்சாளர்கள் ஒருபோதும் இது போன்ற அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயந்துவிட மாட்டார்கள். அடக்குமுறைக்கும், அராஜகத்துக்கும் அஞ்சாத சிங்கங்கள் தான் எங்கள் தொண்டர்களான அதிமுக உடன்பிறப்புக்கள் என தனது அறிக்கையில் கொந்தளித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா சொல்வது ரொம்ப சரி.. ஆனால், ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்த ஜனநாயக மாண்புகளை ஜெயலலிதா சுத்தமாக மறந்துவிடுவது ஏனோ?. இது தான் செலக்டிவ் அம்னீஷியாவோ!!

மாணவ பிரதிநிதிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு:

இந் நிலையில் மருத்துவக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+