3 விபத்துக்களில் 11 பேர் பலி
சென்னை:தமிழகத்தில் நடந்த 3 விபத்துக்களில் 11 பேர் பலியானார்கள். அதில், ராஜபாளையம் அருகே நடந்த விபத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர்.
மதுரையிலிருந்து சிலர் வேனில் குற்றாலத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் சென்ற வேன் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புதூர் விலக்கு என்ற இடத்தில் போனபோது எதிரே வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, நெல்லையைச் சேர்ந்த சிலர் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அனைவரும் ஐசிஐசிஐ வங்கி ஊழியர்கள் ஆவர். குற்றால டூரை முடித்துக் கொண்டு மாருதி காரில் ஊர் திரும்பினர்.
அவர்களது கார் அபிஷேகப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் துரை, செல்வக்குமார், முருகேஷ்குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் என்ற இடத்தில் கார் மீது லாரி மோதியது. இதில் காரில் பயணித்த ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications