சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுக்கள்!
சென்னை:சென்னை அருகே செங்குன்றத்தில் சாலையோரம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுக் குவியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, செங்குன்றம் பகுதியில் ஆர்.ஜி.என். காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கூடம் அருகே சாலையோரம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெருமளவில் ரூபாய் நோட்டுக்கள் கிடந்தன.
இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அங்கு வந்த ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தனர். சிலர், அதில் வெட்டப்படாமல் ரூபாய் நோட்டு ஏதாவது இருக்கிறதா என்று கிளறிப் பார்த்தனர்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்த ரூபாய் நோட்டுக்களை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு லாரி நிறைய மூட்டைகள் சென்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து அந்த அரிசி ஆலைக்கு போலீஸார் சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லாதவை. வங்கியிலிருந்து இவற்றை வாங்கி அந்த அரிசி ஆலைக்கு அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படட்டது.
லாரியில் ரூபாய் நோட்டு மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டபோது சில மூடைகள் தவறி விழுந்துள்ளன. அதுதான் சாலையோரம் கிடந்த ரூபாய் நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications