பாங்காக் வந்தடைந்தார் டாக்டர் ஹனிப்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்:ஆஸ்திரேலிய போலீஸாரால் விடுவிக்கப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப், இந்தியா திரும்பிக் கொண்டுள்ளார். இன்று அதிகாலை அவர் பாங்காக்கை வந்தடைந்தார். இன்னும் சில மணித் துளிகளில் அவர் பெங்களூர் வந்தடைவார். அவரை வரவேற்க அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். கிட்டத்தட்ட 13 நாள் காவலில் வைக்கப்பட்ட ஹனீப், மீது எந்தக் குற்றச்சாட்டையும் பதிய முடியாத நிலையில் ஆஸ்திரேலிய போலீஸ் இருந்தது. ஆனால் ஹனீப்புக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததே.

இதையடுத்து அவரை விடுவிக்க தீர்மானித்தது ஆஸ்திரேலிய போலீஸ். ஆனால் கடைசி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு செல்போன் சிம் கார்டு கொடுத்ததாக கூறி குற்றம் சாட்டியது ஆஸ்திரேலிய போலீஸ்.

Haneef

இந்த வழக்கில் ஹனீப்புக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. ஆனால் அவரது விசாவை திடீரென ரத்து செய்து குடியேற்றத் துறை சிறையில் அடைத்தது.

இதனால் ஹனீப் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. ஹனீப் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அடுத்த திருப்பமாக இந்தப் புகாரிலும் உண்மை இல்லை, இது பொய்யான புகார் என்பது உறுதியானது.

இதையடுத்து ஆஸ்திரேலிய காவல்துறைக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் அங்கு பெரும் எதிர்ப்பு வலுத்தது. ஆஸ்திரேலிய பத்திரிக்கைளும், மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ஹனீப் மீதான வழக்கைத் திரும்பப் பெற ஆஸ்திரேலிய காவல்துறை முடிவு செய்துத. அதன்படி அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இருப்பினும் விசாவை திரும்பத் தர ஆஸ்திரேலிய அரசு மறுத்து விட்டது.

மேலும் ஹனீப் இந்தியா திரும்பவும் ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு பிரிஸ்பேனிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்பினார் ஹனீப்.

ஹனீப்புடன், அவரது உறவினர் இம்ரான், வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ ஆகியோரும் கிளம்பினர். மூன்று பேரும் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் பாங்காங் சென்றனர். இன்று அதிகாலை மூன்று பேரும் பாங்காக்கு வந்து சேர்ந்தனர்.

விமான நிலையத்தில் பாங்காக் போலீஸார் மூன்று பேரையும் பலத்த பாதுகாப்புடன் இந்தியா செல்லும் விமானத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்னும் சில மணித் துளிகளில் ஹனீப் பெங்களூரை வந்தடைவார்.

அவரை வரவேற்க மனைவி பிர்தோஸ் அர்ஷியா, தங்கை சுமையா உள்ளிட்டோர் ஆவலோடு காத்துள்ளனர். விமான நிலையத்திலும் அவரது உறவினர்கள் ஹனீப்பை வரவேற்க காத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+