கட்சிகள் சேர்ந்தால்தான் நதிகள் இணைப்புசாத்தியமாகும் - கலாம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால்தான் நதி நீர் இணைப்பு சாத்தியமாகும், வெற்றி பெறும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் சென்றிருந்த அப்துல் கலாம் சென்னை திரும்பும் வழியில் மதுரையில் தங்கினார். அங்கு அவரை அவரது அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் தனது குடும்பத்துடன் வந்து சந்தித்தார்.
![]() |
அண்ணன் குடும்பத்தை சந்தித்து மகிழ்ந்த கலாம் பின்னர் தன்னைப் பார்க்க வந்த பள்ளிக்கூட மாணவ, மாணவியரை சந்தித்துப் பேசினார். அவர்கலுக்கு ஆட்டோகிராப்பும் போட்டுக் கொடுத்தார்.
மாணவ, மாணவியர் தாங்கள் வரைந்த ஓவியங்களை கலாமிடம் காட்டினர். அவற்றை மகிழ்ச்சியோடுப் பார்த்துப் பாராட்டினார் கலாம்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் நதிநீர் இணைப்பு என்பது மிகவும் சாத்தியமான ஒன்றுதான். அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களின் தேவையையும், நலனையும் கருதி ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் இந்த திட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.













Click it and Unblock the Notifications