சேது திட்டமும் மூட நம்பிக்கையும்-புவியியல் வல்லுனர் தாக்கு
சென்னை:சேது கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லும்படி கடலில் பாதை அமைத்தால் அது ஆபத்தை விளைவிக்கும் என புவியியல் வல்லுநர் உதயணன் பிள்ளை கூறியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் புவியியல் பேராசிரியர் உதயணன் பிள்ளை பேசுகையில்,
பூமியின் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாமிருக்கும் இந்திய துணைக்கண்டம் முன்பு இருந்தது போல் இப்போது கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலை எல்லாம் ஒரு கட்டத்தில் தான் உருவானது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் 21 பவழப் பாறைத் தீவுகள் உள்ளன. இதில் ஒரு தீவு மட்டும் நல்ல தண்ணீர் தீவு. கடல் நீர் மட்டத்தை விட அந்தத் தீவின் நீர்மட்டம் உயரமானது. இவையெல்லாம் இயற்கையாக ஏற்பட்டது.
இதற்கு எல்லாம் கதையும், காரணமும் சொல்ல முடியாது. அதேபோலத்தான் குறைந்த ஆழமுள்ள பகுதிகளில் அதிக வெப்பம், உப்புத்தன்மை ஆகியவற்றால் பவழப் பாறை உருவாகிறது.
பவழப் பாறைகள் எல்லாம் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி எல்லாம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இவையெல்லாம் அறிவியல்பூர்மாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறை வால் வடிவில் உள்ளதாக மூட நம்பிகையான கருத்துக்களை சொல்கிறார்கள். கடலுக்குள் ஏற்படும் இயற்கை மாற்றங்களாலும், நீரோட்டங்களின் தாக்குதலாலும் ராமேசுவரம் பகுதியில் இருக்கும் பவழப் பாறை வால் வடிவில் மாறியுள்ளது.
கடலில் இருப்பது பாலம் அல்ல கடினமான மணல் மேடுதான் என நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் சொல்வதையும், தொழில்நுட்பங்களையும் மதிக்காமல் மதவாதிகள் சொல்லும்படியாக சேதுகால்வாய்க்கு பாதை அமைத்தால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அப்படி அமைத்தால் ராமேசுவரத்திற்கு பெரிய சேதத்தையும், இயற்கைக்கு விரோதமான செயலாகவும் அமைந்து விடும்.
சேது கால்வாய் திட்டத்தில் பவழப் பாறையை வெட்டுவதால் இயற்கைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதே நேரத்தில் இயற்கையான நீரோட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனவும் தொடர்ந்து ஆய்வும் நடக்கிறது என்றார் பிள்ளை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications