கள்ளக் காதலனுடன் உல்லாசம்- கணவன் நேரில் பார்த்ததால் மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:புழலை அடுத்துள்ள சோழவரத்தை சேர்ந்தவர் வால்மூர்த்தி. இவர் மனைவி சுலோச்சனா. கணவன் கூலிவேலையும், மனைவி தோட்டவேலையும் செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சுலோச்சனாவுக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த மனோகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. சுலோச்சனா அவ்வப்போது மனோகரனுடன் தோட்டத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

சுலோச்சனாவின் கணவன் வால்மூர்த்தி எதேச்சையாக மனைவியை பார்க்க தோட்டத்திற்கு சென்றார். அங்கு மனோகரனும், சுலோச்சனாவும் உல்லாசமாக இருந்ததை பார்த்த வால்மூர்த்தி அதிர்ச்சியடைந்துவிட்டார். வால்மூர்த்தியை பார்த்த மனோகரன் தலைதெறிக்க ஓடிவிட்டார். தன் மனைவியை கண்டபடி திட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் மூர்த்தி.

இதனால் மானம் போன சுலோச்சனா வீட்டுக்குத் திரும்பி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காது சுலோச்சனா இறந்தார்.

திருட்டு: கள்ளக்காதல் ஜோடி கைது

இதற்கிடையே சென்னையை அடுத்துள்ள பொன்னேரியில் தெருவில் விளையாடும் குழந்தைகளிடம் நகைகளை திருடி விற்று அந்தப் பணத்தில் உல்லாசமாக சுற்றிய கள்ளக் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிவா(35) , ரீனா(30). மீனவர் இனத்தவர்களான இவர்களுக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. இரு குழந்தைகள் உள்ளன.

இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மீஞ்சூர் அத்திப்பேடு பகுதியில் குடிவந்தனர்.

அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் பாபுலால்நாத் (25) என்பவருடன் ரீனாவுக்கு கள்ளக் காதல் ஏற்பட்டது. சிவா வேலைக்கு சென்றபின்பு, ரீனா-பாபுலால் இடையே கள்ளத் தொடர்பு வளர்ந்தது.

இது சிவாவுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் தன் பேச்சை கேட்காத ரீனாவை விட்டு சிவா பிரிந்து சென்றுவிட்டார்.

ஆனால், பாபுவுக்கு வேலை ஏதும் இல்லாததால் இந்த ஜோடி பணமில்லாமல் கஷ்டப்பட்டுள்ளது. இதையடுத்து ரீனா பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை ஏமாற்றி நகை பறிக்க ஆரம்பித்தார்.

தோடு, கொலுசுகளை திருடி விற்று அந்த பணத்தில் பாபுவுடன் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுப்பள்ளியைச்சேர்ந்த நடராஜன்-கனகா தம்பதியின் மகளான சரஸ்வதியின் காலில் இருந்து கொலுசை கழற்றியுள்ளார் ரீனா. சரஸ்வதி அழது கொண்டே பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

கனகா மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து, கொருக்குப்பேட்டையில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த ரீனா-பாபுலால்நாத் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+