லத்திகா சரணுக்கு டப்பா பதவி:ரவுடிகளை ஒழிப்பேன்-நாஞ்சில் குமரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த லத்திகா சரண் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புதிய ஆணையராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Nanjil Kumaran

இன்று அவர் லத்திகா சரணிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் ெகாண்டார். இதற்கு முன் உளவுப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக குமரன் இருந்தார்.

இதுவரை கமிஷ்னராக இருந்த லத்திகா சரண், போலீஸ் டிஜிபி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அதிகாரம் இல்லாத பதவியாகும்.

Lathika Charan

நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராமானுஜன், தமிழ்நாடு போலீஸ் கமிஷனின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள குமரன் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலம்துறையைச் சேர்ந்த இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.

சென்னை அம்பேத்கர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து 1976ல் ஐபிஎஸ் அதிகாரியானார்.

மிக முக்கிய வழக்குகளைக் கையாண்டவர். ஒரு காலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், இப்போது முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமாக உள்ளார்.

ரவுடிகள் ஒழிக்கப்படுவர்:

ஆணையராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் குமரன் பேசுகையில், சென்னை நகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரப்படும்.

ரவுடிகளின் அட்டகாசம் அறவே ஒழிக்கப்படும். சென்னையில் ரவுடிகளுக்கு இடமில்லை. மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரவு நேரங்களில் மக்கள் பயமற்ற நிலையில் நிம்மதியாக உறங்கும் நிலை ஏற்படுத்தப்படும்.

சென்னை நகரின் வாகன நெரிசலைக் குறைக்க உரிய தீர்வு காணப்படும். நில மோசடிக் குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+