பொது மக்கள் பணத்தை சுட்ட ஏட்டு கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்து பொது மக்களின் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பாஸ்கரன். இவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பைனாஸ் கம்பெணி ஆரம்பித்தனர்.
அதில் தவனை முறையில் சீட்டுக்கள் பிடித்தனர். பலர் அதில் இணைந்து பணம் செலுத்தினர். லட்சக்கணக்கான பணம் இவ்வாறு சேர்ந்தது.
ஆனால், பணம் முதிர்வடைந்த நிலையில், அதைத் திருப்பி தரவில்லை பாஸ்கரன். இதையடுத்து மக்கள் போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் ஏட்டு பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications