மிரட்டல் வழக்கில் பிரியங்கா சோப்ரா விடுதலை
Subscribe to Oneindia Tamil
இந்தூர்:
செயலாளரை மிரட்டிய வழக்கிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ரா விடுவிக்கப்பட்டார்.
நடிகை பிரியங்கா சோப்ராவின் உதவியாளராக இருந்தவர் பிரகாஷ் ஜாஜு. இவர் சமீபத்தில் இந்தூர் நீதிமன்றத்தில் பிரியங்கா சோப்ரா மீது ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.அதில், பிரியங்கா சோப்ராவும், அவரது தந்தை அசோக் சோப்ராவும் தன்னை மிரட்டியதாக கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் பிரியங்கா மற்றும் அசோக் சோப்ராவுக்கு இந்தூர் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து பிரியங்கா சோப்ரா மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் முன்பு மனு தாக்கல் செய்தார். அதில், தன் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னையும், தனது தந்தையையும் விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த இந்தூர் பெஞ்ச், பிரியங்காவை மட்டும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. அவரது தந்தை மீதான வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications