நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்:கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்!

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்:நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது.

Strong quake causes damages in NZ

நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது.

இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது.

சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியதால் கடலோரப் பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால், சுனாமி அலைகள் உருவாகவில்லை.

அதே போல வனாது உள்ளிட்ட பல தீவுக் கூட்டங்களிலும் நிலநடுக்கத்தால் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், உயிர்ச் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்தத் தீவுகளிலும் சுனாமி பயம் பரவியுள்ளது.

ஜப்பானில் சிறிய சுனாமி தாக்குதல்:

இதற்கிடையே ரஷ்யாவின் சக்கலின தீவுப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. அவை ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொகைடோ தீவுப் பகுதியை தாக்கின.

ரிக்டர் அளவுகோளில் 6.4 புள்ளிகள் என்ற அளவுக்கு உருவான இந்த நிலநடுக்கத்தால் ஒரு அடி மட்டுமே உயரம் கொண்ட சுனாமி அலை உருவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்ததில் ரஷ்யாவின் சக்லைன் பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+