அமெரிக்கா- மின்னபோலிஸ் பாலம் இடிந்து விழுந்து7 பேர் பலி- மிஸிஸிபி ஆற்றில் மூழ்கிய கார்கள்
மின்னபோலிஸ்:அமெரிக்காவின் மின்னபோலிஸ் மாகாணத்தில் மிஸிஸிபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்து 7 பேர் பலியாயினர். மேலும் பல படுகாயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததில் அதன் கீழே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் இரண்டு துண்டானது. அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை இச் சம்பவம் நடந்தது.40 ஆண்டு பழமையான இந்த பாலத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்தது. பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன, சில வாகனங்கள் இடிந்த பாலத்தின் கீேழ சிக்கி நசுங்கின.
பாலத்தின் கீழ் அடுக்கில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும் இடிபாடுகளில் சிக்கியது. அது இரண்டு துண்டாகியது. சரக்கு ரயில் என்பதால் அதில் உயிர்ச் சேதம் இல்லை.
8 வழிப் பாதைகள் கொண்ட இந்தப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
7 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் ஆற்றில் அடித்தச் செல்லப்பட்டுள்ளனர்.இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பாலத்தின் மீது சென்ற ஒரு லாரி வெடித்துச் சிதறியதாகவும் அதன் பின்னரே பாலம் உடைந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர். இச் சம்பவத்தில் தீவிரவாதத்துக்கு தொடர்பு ஏதும் இல்லை அரசு தெரிவித்துள்ளது.
தினந்தோறும் 2 லட்சம் கார்கள் பயன்படுத்தி வந்த பாலம் இது.












Click it and Unblock the Notifications