டாடா சொல்லித்தான் வைகுண்டம் வந்தாரராம்:சொல்கிறார் மாஜி நைனார் நாகேந்திரன்!
சென்னை:டைடானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாடா நிறுவனத்தின் ஆலோசனைப்படிதான் அக்கூட்டத்தில் வைகுண்டராஜன் கலந்து கொண்டார் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களை மறுத்து முதல்வர் கருணாநிதி நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் முன்னாள் அதிமுக தொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் சட்டசபையில் பேசியதை மேற்கோள் காட்டி விளக்கியிருந்தார்.
மேலும் டாடா நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்ட விரோதமான டைட்டானியத்தை அள்ளி, திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்படும் வைகுண்டராஜன் ஏன் வந்தார் என்றும் கருண்நிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரை தாதா என்று அன்போடு குறிப்பிடும் கருணாநிதி, இந்த தாதா ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற முறையில் அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு வந்தாரா? என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
![]() |
இதற்கு ஜெயலலிதா அளித்த பதில் அறிக்கையில் மழுப்பல் தான் அதிகம் இருந்தது. வைகுண்டத்தைப் பற்றிய கேள்விக்கு ஜெயலலிதாவின் அறிக்கையில் சரியான பதில் இல்லை.
இந் நிலையில் மாஜி மந்திரி நைனார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி அக்கடிதத்தில் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிக்கான ஒப்பந்தம் குறித்தும் அதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் விவரம் குறித்தும், அந்த நிறுவனம் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கியிருந்தார்.
இதன் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கொண்டுள்ள அச்சங்கள் குறித்தும் விவரித்திருந்தார்.
மேலும் மக்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கும், டாடா நிறுவனம் தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், டாடா நிறுவனம் மட்டுமின்றி தற்போது அங்கு மைனிங் லீஸ் பெற்று தொழில் செய்து கொண்டிருப்பவர்களையும் அழைத்துப் பேசாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கியிருந்தார்.
இதன் அடிப்படையில்தான் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி தொழிற்துறை செயலாளர் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
அக்கூட்டத்தில் டாடா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே அப்போது அந்தப் பகுதியில் மைனிங் லீஸ் செய்து கொண்டிருந்தவர் என்ற முறையில் வைகுண்டராஜன் கலந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்.
டாடா நிறுவனம் நேரடியாக அவர்களுக்கு வேண்டிய நிலத்தை அங்குள்ள மக்களிடம் பேசி விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நில உரிமையாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அந்தத் தொழிற்சாலை வருவதால், பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும்.
அங்குள்ள நிலத்தை தொழிற்சாலை அமைப்பதற்கு கொடுக்க இருக்கும் கிராம விவசாயிகள், கிராமிய தொழிற் கலைஞர்கள் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு டாடா நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால் மேற்கூறிய கருத்துக்களை டாடா நிறுவனம் ஏற்க மறுத்தது. 29.7.2004 மற்றும் 31.3.2005 ஆகிய நாட்களில் சட்டசபையில், டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் குறித்து பேசப்பட்டது.
அதன் பின்னர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் கருத்துரையின்படி மக்களிடம் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்று தெரிந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் முக்கியம் என்றும் இந்தத் தொழிற்சாலை வரவினால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில், ஜெயலலிதாவால் அந்தத் திட்டம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் நாகேந்திரன்.
ஆனால், அந்த டாடாவிடம் வைகுண்டத்துக்கு 1,000 ஏக்கர் தர வேண்டும் என ஜெயலலிதா பேரம் பேசியதாக கருணாநிதி குறிப்பிட்டிருப்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications