ஆடிப் பெருக்கு- காவிரியில் மக்கள் வெள்ளம்
திருச்சி:இன்று ஆடிப் பெருக்கு (ஆடி 18) கொண்டாடப்படுவதையொட்டி காவிரிக் கரையோரப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.
இதனால் திருச்சி, ஒகேனக்கல், மேட்டூர் ஆகிய காவிரிக் கரையோரப் பதிகளில் உற்சாகம் கரைபுரள்கிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் இந்த தினத்தில் காவிரியில் நீராடினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒகேனக்கல்லில் உள்ள தேசநாதீஸ்வரர் கோவிலுலும் காவேரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகின்றன.
மேட்டூரில் காவிரிப் பாலம், முனியப்பன் கோவில் அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினர்.
ஈரோட்டை அடுத்துள்ள பவானி கூடுதுறையிலும் (இது காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம்) ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர்.
திருச்சியில் கல்லனை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீராடி சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர்.
மேலும் காவிரியின் துணை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு ஆகியவற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர்.
அதிகாலை முதலே மக்கள் இங்கு நீராட ஆரம்பித்துவிட்டனர். இந்த ஆண்டு காவிரியில் நீர் அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தப் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications