இனி செல் ஒன்று, சிம் ரெண்டு!
டெல்லி:ஒரே செல்போனில் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசும் வசதியை ஸ்பைஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நம்ம நாட்டுக்குத்தான் இது புதுசு. ஆனால், கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த வசதி வந்து விட்டது.
இந்த இரட்டை சிம் கார்டு முறைப்படி, ஒரே செல்போனில் ஜிஎஸ்எம் சிம் கார்டு ஒன்றும், சிடிஎம்ஏ சிம் கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு சிம்கார்டு மூலம் நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, மற்றொரு சிம் கார்டுக்கு அழைப்பு வந்தால், முதல் சிம் கார்டை கட் செய்து விட்டு, அடுத்த சிம் கார்டை அட்டெண்ட் செய்ய முடியும்.
இது குறித்து ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குனால் அஹூஜா கூறுகையில், இரண்டு செல்போன்களை சிலர் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இனி அந்தத் தொல்லை இல்லை. பிசியான தொழிலதிபர்களுக்கும், பிறருக்கும் இந்தப் புதிய வசதி நிறைந்த பலனைத் தரும் என்றார்.


Click it and Unblock the Notifications
